Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ண பலராம் கோயிலில் கிருஷ்ண ... வன்னிய பெருமாள் கோவிலில் வைணவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கயிலாயம் சென்றவர்களுக்கு பட்டம் வழங்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2013
10:08

சிதம்பரம்: திருக்கயிலாயம் சென்றவர்களுக்கு பாராட்டு மற்றும் பட்டம் வழங்கும் விழா சிதம்பரத்தில் நடந்தது. சிதம்பரம் கைலாஷ் மானசரோவர் ராஜ யாத்திரைக் குழு சார்பில் இந்த ஆண்டு திருக்கயிலாயம் சென்றவர்கள், பாரத் பரிக்கிரமம் செய்தவர்களுக்கு பாராட்டு மற்றும் பட்டம் வழங்கும் விழா நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் திருக்கயிலாயத்திற்கு முதல் முறை சென்றவர்களுக்கு கயிலைமணி, இரண்டு ஆண்டு சென்று வந்தவர்களுக்கு கயிலைநாதர், மூன்று மற்றும் அதற்கு மேல் சென்றவர்களுக்கு கயிலைவாசி என பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திருக்கயிலாயம் சென்ற 110 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு சிதம்பரம் ஆடிட்டர் நடராஜபிரபு தலைமை தாங்கினார். கைலாஷ் யாத்திரை ஒருங்கிணைப்பாளர் சென்னை பாலகிருஷ்ணன் வரவேற்றார். வடலூர் ஊரன் அடிகளார் பங்கேற்று திருக்கயிலாய யாத்திரை சென்றவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார். சித்தூர் நகரி சிவானந்த யத்தீந்திர சுவாமி ஆசிரமம் சுவாமி சரணானந்தா அருளாசி வழங்கினார். ராஜ யாத்திரை நிர்வாகிகள் சிவராமன், மேகநாதன், நாராயணன், கணபதி, நாகராஜ் குருக்கள் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar