Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேணுகோபாலசுவாமி கோவிலில் ... சீனிவாச பெருமாள் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2013
01:09

ஊத்துக்கோட்டை: பாவனியம்மன் கோவிலில், ஆறாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து அனைத்து மீனவர்களும் பெரியபாளையத்தில் குவிந்தனர். தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் முக்கியமானது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆடி மாத விழா விசேஷம். ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்வர். நேற்று ஆறாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, மாநிலத்தில் உள்ள நாகப்பட்டினம், சென்னை ராயபுரம், வேளாங்கண்ணி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பெரியபாளையத்தில் குவிந்தனர். மேலும், ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து லாரி, வேன் போன்ற வாகனங்களில் வேப்ப இலையை கட்டிக் கொண்டு பக்தர்கள் வந்தனர். சனிக்கிழமை இரவு கோவிலுக்கு வந்த பக்தர்கள், தங்குவதற்கு போதுமான வசதி இல்லாததால், ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக குடில்களில் தங்கி, காலை எழுந்து குளித்துவிட்டு, அம்மனை தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் வேப்பிலை ஆடை கட்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ஆந்திர மாநிலத்தில் வந்த லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை ஊத்துக்கோட்டையில் இருந்து சத்தியவேடு, திருவள்ளூர் வழியாக திருப்பி விட்டனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.குமரவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar