Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து மத தகவல் களஞ்சியம்: ... வரசித்தி விநாயகர் கோவிலில் 8ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று புகழ்த்துணை நாயனார் குருபூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 செப்
2013
10:09

புகழ்த்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. செருவல்லிப்புத்தூர் என்னும் தலத்திலே தோன்றியவர் தான் புகழ்த்துணையார் என்னும் சிவத்தொண்டர். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் எங்கே? என்று தேடித் தேடி அலைந்தனர். ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல், எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவ்வடியார் சிவலிங்கத்துக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகையில் உடல் தள்ளாமையினால் குடத்தைத் தவறவிட்டார். சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார். எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்றபோதும் நீ மட்டும் எம்மையே அணைந்து எமக்காக வழிபட்டு பணியாற்றியமைக்காக யாம் உமக்கு பஞ்சம் நீங்கும்வரை எமது பீடத்தில் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைத்து  அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார் அரனார். துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பூவுலகில் வாழ்ந்து பகவானின் திருவடியைச் சேர்ந்தார்.

பொன்னடிக்கே மனம் வைத்த புகழ் துணைக்கும் அடியேன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar