Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மாரியம்மாள்புரம் புனித லூர்துஅன்னை ... கோவையில் ஒரு கோடி ரூபாய் கோவில் நிலம் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி! கோவையில் ஒரு கோடி ரூபாய் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 செப்
2013
12:42

மனிதன் வாழப் பிறந்தவன்; உண்மை தான். ஆனால், அவன் எப்படி வாழ ஆசைப்படுகிறான் என்பதில் தான் பிரச்னையே ஏற்படுகிறது. பணத்துக்கும், பொருளுக்கும் ஆசை; புகழுக்கும், பெயருக்கும் ஆசை; தலைவனாக ஆசை; பிறரை அடிமைப் படுத்துவதற்கு ஆசை என்று, ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக் கொண்டே வருகிறது. தேவைக்கு மேல் தான் இருக்கிறதே மேலும் எதற்கு, என்று நினைப்பதில்லை. இதுதான், மனித சுபாவம். மனிதனைத் தவிர மற்ற இதர ஜீவன்கள் இப்படி ஆசைப்படுவதில்லை. அன்றைக்கு என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு, நிம்மதியாக தூங்குகின்றன. நாளைக்கு வேண்டும் என்று எடுத்து வைப்பதோ, சேமித்து வைப்பதோ இல்லை. அவைகளின் தேவைகளும், ஆகாரம் தவிர வேறு எதுவுமில்லை. இவைகள், தங்கள் இனத்தை கண்டு பயப்படுவதை விட, மனிதர்களை கண்டு தான் பயப்படுகின்றன. அவனை விட்டு விலகி, எங்கோ காடுகளில் ஒளிந்து கொண்டிருந்தாலும், மனிதன் அதைத் தேடி கண்டுபிடித்து வேட்டையாடுகிறான்.

எதற்காக... பணத்துக்காக; சுயநலத்துக்காக. எங்கேயோ சுதந்திரமாக திரிந்து, கிடைத்ததை சாப்பிட்டு காலம் கழிக்கும் குரங்கையோ, கரடியையோ பிடித்து வந்து, அதை அடித்து உதைத்து, இடுப்பில் ஒரு சங்கிலியை கட்டி தெருத் தெருவாக சுற்றி," கர்ணம் போடுடா ராமா... என்று சொல்லி வேடிக்கை காட்டி, பணம் பெற்று, வயிறு வளர்க்கிறான் மனிதன். உழைத்து உண்ண வேண்டும் என்று தோன்றுவதில்லை. மரங்களில் சுதந்திரமாகவும், உல்லாசமாகவும் இருக்கும் கிளிகளைப் பிடித்து, கூண்டிலடைத்து, மரத்தடி நிழலில் உட்கார்ந்து, கிளி ஜோசியம் என்று பணம் சம்பாதிக்கிறான். உழைக்க மனம் வருவதில்லை. இன்னும் சிலர் பணத்திற்காக கொலை, கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். கிடைக்கும் பணத்தை ஜாலியாக செலவு செய்து சந்தோஷப்படுகின்றனர். கொள்ளை அடிக்கப்பட்டவனின் நிலையை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. ஜீவ வதையை புத்தர் முதல் வள்ளலார் வரை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனாலும், ஆடு, மாடு, கோழி மற்றும் நீர் வாழ் இனங்கள் எல்லாமே பணத்துக்காகவே கொல்லப்படுகின்றன. பிற ஜீவன்களை கொன்று, மனித ஜீவன்கள் வாழ்கின்றன. பணத்தாசையால், பல பாவ காரியங்களை செய்கின்றனர். பணத்தாசை வேண்டாம். பணம் சம்பாதிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. நிறைய சம்பாதிக்க வேண்டும். ஆனால், அது வேறு எந்த மனிதனுக்கோ, ஜீவனுக்கோ இம்சை இல்லாததாக இருக்கட்டும் என்று தான் பெரியவர்கள் சொல்கின்றனர். ஆனால், எத்தனை பேர் இதை ஒப்புக் கொள்வர்? கிடைத்ததை வைத்து, நேர்மையாக வாழலாம் என்று நினைப்போரும் இருக்கின்றனர். அவர்களோடு, இவர்களும் இருக்கின்றனர், விசித்திரம் தான்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple
 கடலுார் : கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராமநவமி உற்சவம் நடக்கிறது.கடலுார் அடுத்த ... மேலும்
 
temple
 திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை விழா கொடியேற்றத்தில் பக்தர்கள் ... மேலும்
 
temple
உடுமலை : ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple
மயிலாடுதுறை : கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.