Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று அருணந்தி சிவாச்சாரியார் குரு ... ஊத்துக்கோட்டை சிவாலங்களில் பிரதோஷ விழா கோலாகலம்! ஊத்துக்கோட்டை சிவாலங்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோடரின மக்களின் பாரம்பரிய மொற்பர்த் பண்டிகை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2013
01:10

ஊட்டி: தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான மொற் பர்த், ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசித்து வரும் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான மொற் பர்த் பண்டிகை, ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ கொண்டாடப்படுவது வழக்கம். இதில், மாவட்டத்தில் உள்ள தோடரின மக்கள் பங்கேற்று கோலாகலமாக கொண்டாடுவர்.  தோடரின மக்கள் வசிக்கும் மந்துகளின் (கிராமங்களின்) தலைமை மந்தான தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் இப்பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்து கொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த கோவிலில் முன்பு சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவில் வளாகத்துக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளதால் தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து மண்டியிட்டு வழிபாடு நடத்துகின்றனர். பின், தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றனர். வழிபாடு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் பால், நெய், இனிப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக பிரசாதம் அனைவருக்கும் வழங்குகின்றனர். தோடரின மக்களின் தலைவர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடரின கிராமங்களில் வாழும் மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர். இந்த சிறப்பு திருவிழாவை காண, உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும், சுற்றுலாப் பயணிகளும், நம் நாட்டின் பல பகுதிகளின் மக்களும், ஊட்டிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.

Default Image
Next News

தகவல்: என். பிரதீபன்.
படம்: ஒய்.ஜே. ரகு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar