Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் கோவிலில் பவித்ர விழா நிறைவு வேப்ப மரத்தில் அம்மன்உருவம்: பக்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி ஊர்வலத்துக்குதடை விதித்து உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2013
11:10

இடைப்பாடி: இடைப்பாடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால், ஸ்வாமியை ஊர்வலமாக எடுத்துச் செல்ல, ஆர்.டி.ஓ., தடை விதித்தார்.இடைப்பாடி தாலுகா, வீரப்பம்பாளையம் பகுதியில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் நிர்வாகத்தை, வீரப்பம்பாளையம், வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கவனித்து வருகின்றனர். புரட்டாசி மாதம் ஐந்தாம் சனிக்கிழமை பூஜைக்காக, அதற்கு முந்தைய தினமான வெள்ளிக்கிழமை மாலையே, ஸ்வாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அடுத்தநாள் சனிக்கிழமையன்று, பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.கோவில் நிர்வாக தரப்பினருக்கும், தாசாங்கம் செய்பவர்களுக்கும், கோவில் நிலம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், இரவு நேரத்தில் ஸ்வாமியை அனுப்ப நிர்வாக தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர்.தாசாங்கம் செய்பவர்கள், சங்ககிரி ஆர்.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்தனர். அதையடுத்து, இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., ரங்கநாயகி, சங்ககிரி டி.எஸ்.பி., ராமசாமி, தாசில்தார் மணிமாலா ஆகியோர் தலைமையில், அக் 17 இரவு பேச்சுவார்த்தை நடந்தது.பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாததையடுத்து, இரவு நேரத்தில் ஸ்வாமி ஊர்வலம் நடத்தக்கூடாது எனவும், கோவில் சன்னதியில், திம்மராய பெருமாளை தரிசிக்க யாரும் தடை விதிக்கக்கூடாது எனவும், ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar