Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லபை ஐயப்பன் கோயிலில் நவீன சமையல் ... திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல்! திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் தங்கக் கவசத் திருப்பணி: ஆறு ஆண்டாக இழுபறி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 நவ
2013
10:11

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயணப் பெருமாள் கோவில், மூன்றடுக்கிலானது. இங்கு, 4 நிலைகளில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரணியா சூரனை வதைக்க, தேவர்கள் கோஷ்டியாகக் இத்தலத்தில் கூடி, செய்த பிரார்த்தனையை அடுத்து, இறைவன் நாராயணன், நரசிம்ம அவதாரம் எடுத்ததால், இத்தலம் திருக்கோஷ்டியூர் என்றழைக்கப்படுகிறது. இங்கு, இந்திரன் பூஜித்த சவுமிய நாராயணப் பெருமாள் உற்சவராகஉள்ளது சிறப்பானது. இக்கோவிலுக்கு,மேலும் சிறப்பைத் தருவது, அஷ்டாங்க திவ்ய விமானம். பெருமாளின் 108 திருப்பதிகளில், அஷ்டாங்க விமானம் உள்ள ஒரு சில கோயில்களில், சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் முதன்மையானது. இங்குள்ள பிரமாண்டமான விமானம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சுதை சிற்பங்களுடன் பக்தர்களின் மனதைக் கவர்ந்தது. பெருமாளின் திவ்ய மங்கள திருமேனியாகவே, இவ்விமானம் பக்தர்களால் வணங்கப்படுகிறது. இங்கு தான், ராமானுஜர் எழுந்தருளி, மகா மந்திரத்தை மக்களுக்கு உபதேசித்தார். அவருடைய உருவமும் இந்த விமானத்தில் உள்ளது. அஷ்டாங்க விமானத்தின் வடபக்கம் நரசிம்மர் இருக்கிறார். அவருக்கு அருகில் ராகு,கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயில் விமானத்திற்கு தங்கக் கவசத் திருப்பணி செய்ய, சமஸ்தான அனுமதியுடன், "ஸ்ரீ சவுமிய நாராயணன் எம்பெருமானார் சாரிடபிள் டிரஸ்ட் முன் வந்தது. இதன்படி, 2007 ல், சுமார் ரூ.60 கோடி மதிப்பில் திருப்பணியை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. பின்னர், விமானத் திருப்பணிக்கான பாலாலயமும், திருப்பணியும் துவங்கியது. விமானத்தில் இருந்த சுதை சிற்பங்கள் அகற்றப்பட்டு, அந்த வடிவிலான தாமிர தகடு பதிக்கும் பணி நடந்தது. இப்பணி துவங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாகியும், முழுமையடையவில்லை. மழை காலங்களில் விமானத்தின் வழியே நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. மாசித் தெப்பத்திற்கு வரும் பக்தர்கள், திருப்பணி முழுமை அடையாதது குறித்து கவலை தெரிவித்துச் சென்றனர்.டிரஸ்ட் நிர்வாக செயலர், திருக்கோஷ்டியூர் மாதவன் கூறுகையில்,"தனி நபர் வழக்கால், திருப்பணி தாமதமாகி, தற்போது நடந்து வருகிறது. விரைவில் முடிவடைந்து விடும். தங்கம் விலை உயர்வால் பாதிப்பில்லை, என்றார். சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோவன் கூறுகையில், ""பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஓராண்டிற்குள் திருப்பணி நிறைவேறும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar