Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் தங்க அங்கி பெட்டியை சுமந்த ... திருச்செந்தூர் கோயிலில் புத்தாண்டு பூஜைக்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு! திருச்செந்தூர் கோயிலில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரெடிமேடு மயத்தால் மங்கும் மார்கழி: கோலமிடும் முறைக்கு முற்றுப்புள்ளி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2013
10:12

கோவை: மாற்றுக்கலாசாரத்தை நோக்கி படையெடுப்பதால், அன்றாட வேலைகளும், "ரெடிமேடு மயமாகிவிட்டன. மண்தரைகளை சிமென்ட் பூச்சுகள் ஆக்கிரமித்துள்ளதால், மார்கழியை வரவேற்கும் கோலமிடும் பழக்கத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இறைவழிபாட்டுக்கு உகந்த தமிழ் மாதங்களில், மார்கழியும் ஒன்று. மார்கழி மாதம் என்றாலே, சிறப்பு பூஜைகள், வீதியெங்கும் வண்ண கோலம், மூடுபனி என, எக்கச்சக்க சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும். விவசாயிகள், உழுது பயிரிட்ட விளைச்சலை, வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும், அறுவடை மாதம் மார்கழி தான். மார்கழியில் சாகுபடியாகும் தானியங்களே, தை பொங்கலுக்கு, படையலாகின்றன. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட மார்கழி மாதத்தை, வீடுதோறும் வண்ண கோலமிட்டு வரவேற்பது வழக்கம். இந்த நடைமுறை, தற்போது குறைந்து கொண்டே வருகிறது. மார்கழி மாதம் துவங்கி, பல நாட்களாகியும், பல வீதிகளில் வண்ணக் கோலங்களே இன்றி, வெற்றிடமாக காட்சியளிக்கின்றன. மாறிவரும் கலாசாரம், நவீனத்தை அதீதமாக வரவேற்பது உள்ளிட்டவை, வாசல் கோலங்களுக்கும், முற்றுப்புள்ளி வைத்துள்ளன. நம் முன்னோர் எறும்பு, பூச்சி போன்ற சிறிய உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்காக, வீடுகள், கால்நடைகளின் கொட்டகை, குப்பை மேடு உள்ளிட்ட இடங்களில், சாணம் தெளித்து, பச்சரிசி மாவில் கோலமிடுவது வழக்கம். புறநகர் மற்றும் நகர் பகுதிகளில், பொருளாதார நோக்கத்தோடு கூடிய, அணுகுமுறை அதிகரித்துள்ளதால், வீடுகளுக்கு முன்பு, திண்ணை அமைக்கும் நடைமுறை அடியோடு மாறிவிட்டது. இருக்கும் நிலத்தை தவிர, தெருக்களையும் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி, மண்தரைகளை சிமென்ட் பூச்சுகளால் அலங்கரிப்பதால், மண்தரையை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சிமென்ட் தரையில், "கெமிக்கல் சாணப்பொடியால் அலங்கரித்து, சுண்ணாம்பால் அழியாத கோலம் போடுவதால், எந்த பயனும் இல்லை.

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த லீலாவதி கூறுகையில்,""சாணம் தெளித்து கோலம் போடுவதை, பலர் நாகரிகமற்ற செயலாக கருதுகின்றனர். கிருமி நாசினியான சாணத்தை வாசலில் தெளிப்பதால், வெளியிடங்களுக்கு செல்லும் போது, கால்களில் சேர்ந்துவரும் கிருமிகள், சாணம் பட்டு அழிந்து விடும் என்பர். குளிர்காலத்தில், சின்னசிறு உயிரினங்கள், இரைதேடி செல்ல முடியாததால், பச்சரிசி கோலமிடுவது வழக்கம். ஆனால், இது கடந்த ஐந்து ஆண்டுகளாக மாறிவிட்டது. ""சாணப்பொடியை தூவி, சுண்ணாம்பு கோலத்தையோ, ரெடிமேட் "ஸ்டிக்கரையோ ஒட்டுவிடுகின்றனர். உடலுழைப்பை கொடுக்க வேண்டிய வேலைகள் எல்லாம், ரெடிமேடு மயமாகிவிடுவதால், பெண்களுக்கு உடலளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar