Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை தெப்பத்திருவிழா: ஏராளமான ... கோயிலாங்குளத்தில் வாழைப்பழத் திருவிழா! கோயிலாங்குளத்தில் வாழைப்பழத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று தைப்பூசம்: செல்லப்பிள்ளையை வணங்குவோமா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜன
2014
10:01

போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான், பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். இவர் சிவபார்வதிக்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குகிறார். இந்நாளில், இவரை இருந்த இடத்தில் இருந்தே சிந்தித்தாலே போதும். இப்பிறவிக்கு வேண்டிய பொருளும், மறுபிறவி இல்லாமலும் செய்து விடுவார். சித்தர்களுக்கெல்லாம் தலைமைச் சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் இத்தலத்திற்கு "சித்தன்வாழ்வு என்றும் பெயருண்டு. பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் "பழநியாண்டி என்று அழைப்பர். நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப்பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப்பெருமான் இங்கு ஆண்டியாக இருப்பதாக தல வரலாறு கூறுகிறது. ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால் ராஜாங்க அலங்காரத்தில் பட்டுபீதாம்பரதாரியாக கிரீடத்துடன் ராஜாவாக வழிபாடு செய்வதையே விரும்புகின்றனர். பழநியப்பன் முருகபக்தர்களின் செல்லப்பிள்ளை அல்லவா! இதனால் இப்படி ஒரு அலங்காரம்! மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்வில் இன்ப துன்பம் என்னும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இரவுபகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. ஆனால், மனம் ஒருபோதும் தடுமாறக்கூடாது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கான நல்லறிவைத் தரும் ஞானபண்டிதனாக முருகப்பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

பகைவனுக்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர் அவர். அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானவர் என்று பழநி தலபுராணம் கூறுகிறது. ஆனால், தத்துவரீதியாக இவ்விஷயம் இப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டிருக்கிறார். அதனால் தான் பழநி சென்று வழிபடுபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். தைப்பூச நன்னாளில் ஞானபண்டிதனைச் சரணடைந்து இந்த பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்குப் பிறகு அவனது கந்தலோகத்தில் வாழும் பாக்கியமும் பெறுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar