Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளவட்டக் கல் அலேக்: இளைஞர்கள் ... ஆக்ரோஷமாய் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் முறையாக ஆக்ரோஷமாய் அலங்காநல்லூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொல் பழங்கால பாறை ஓவியங்கள் போடி அருகே கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜன
2014
11:01

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் தாலுகா, பாலாறுபட்டியில் உள்ள, மல்லிங்கர்சாமி மலையில், தொல் பழங்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மல்லிங்கர்சாமி மலையில், சென்னை பல்கலை, தொல்லியல் துறையின் மாணவர் ஜெகதீஸ்வரன், கள மேற்பரப்பு ஆய்வு செய்த போது, பாறை ஓவியங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து, ஆய்வு மாணவர் ஜோதீஸ்வரன் கூறியதாவது:
மல்லிங்கர்சாமி மலையில், சிறிய குகை உள்ளது. இக்குகை, மூன்று பெரும் கற்பாறைகளால் ஆனது. குகைக்குள்ளே செல்ல, மூன்று வழிகள், இயற்கையாகவே அமைந்துள்ளன. குகையில் நுழையும் இடத்தில், பாறை ஓவியங்களை பார்த்தேன். ஓவியங்கள், பறவையின் முகத்துடன் கூடிய, நான்கு மனித உருவங்கள் நடனமாடுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பறவை அல்லது விலங்கு முகம் போல, வேடமணிந்து ஆடுதல் என்பது, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நடந்த, நடனமாக இருக்கலாம். இந்த வகையான நடன காட்சி, விழுப்புரம் மாவட்டம், கீழ்வாலை அருகே, கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியத்திலும் காணப்படுகிறது. நடன காட்சிகளுக்கு இடையே, இரண்டு மனிதனை குறிக்கும் குறியீடுகள் காணப்படுகின்றன. இது, சிந்து சமவெளி நாகரிகத்தில், மனிதனை குறிக்க, பயன்படுத்தப்பட்ட குறியீட்டை ஒத்து காணப்படுகிறது.இந்த உருவகங்களுக்கு சற்று கீழே, ஒரு விலங்கின் உருவமும், அதன் மீது மனிதன் ஒருவன் அமர்ந்து, வேட்டையாடுவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்பாறை ஓவியங்கள் அமைந்துள்ள இடத்தின் அருகே, முற்பழங்கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடாரிகள் கிடைக்கப் பெற்றதால், இக்குகையானது, முற்பழங்கற்காலம் முதற்கொண்டு, மனிதர்களின் வாழ்விடமாக இருந்துள்ளது என்பதை அறியலாம். இம்முற்பழங்கால மனிதர்களே, இப்பாறை ஓவியங்களை தீட்டினர் என்பதையும், அறியலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar