Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை! தொண்டி கடற்கரையில் தோண்ட தோண்ட .. 500க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள்! தொண்டி கடற்கரையில் தோண்ட தோண்ட .. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் பிப்.6ம் தேதி கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2014
06:01

திருவாரூர்: நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவில் கட்டுமானப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 6ம்தேதி நடக்கிறது. கோவில் திருப்பணிக்கு நன் கொடை எதிர்பார்த்துள்ளனர். தஞ்சையை 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் சரபோஜி தன் மனைவி யமுனாம்பாயுடன் திருவிசை நல்லூரில் வாழ்ந்த மகான் ஸ்ரீ ஸ்ரீதரவேங்கடேச ஐய்யாவால் சுவாமியிடம் ராமநாம ஜப தீட்சை பெற்று சதார்வ காலமும் ராம நாமத்தை ஜபித்து வந்தனர். ராம நாமத்தை ஜபித்து வந்த மகாராணி யமுனாபாய் என்கிற யமுனாம்பாள் நிறைமாத கற்பினியாக இருக்கும்போது அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில்   இருந்த மாமரத்தில்  மெய்பொருளாம் இறைவனை தனக்கு உறுதுணையாக எண்ணி அம்மெய்பொருளோடு, மரத்தில் இரண்டரக் கலந்து விட்டார்.

Default Image
Next News

அவர்களின் வழியில் வந்த மராட்டிய மன்னர்கள் அந்த மாரத்தையே இறைவனாக நினைத்து வழிபட்டு தங்கள் வம்சத்தின் புத்திரதோஷம் நீங்கப் பெற்றனர். மராட்டிய மன்னர்களில் ஒருவரான பிரதாவசிம்ம மகாராஜா காலத்தில் அன்னை யமுனாம்மாள் பெயரில் சத்திரம் ஒன்று நிறுவி அனைவருக்கும் அனை த்து வித தர்மங்களும் செய்து வந்தனர். மேலும் இவ்வூருக்கு அன்னை யமுனாம்மாள் பெயரை வைத்து யமுனாள் பாள் புரம் என்று அழைத்தனர். புத்திர பாக்கியம் அருளும் சந்தான ராமர் கோவிலை நிறுவியும் சதுர்வேத பிராமனர்களுக்கு குடியிருப்பு வசதியும்  செய்து கொடுத்து சர்ம மானியம் அக்ரஹாரம் என பெயரிட்டு அவர்களுக்கு அருகில் உள்ள கிராமத்தில் விளை நிலங்களை கொடுத்தும் அவ்வூருக்கு சர்வமான்யம் என்றும் பெயரிடப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சந்தானராமரை பற்றி பாடும் போது யமுனாம்புரி நீ வசந்தம் என்றுபாடியுள்ளார். காலப் போக்கில் இவ்வூர் நீடாமங்கலமாக மறுவியுள்ளது. அதன் பின் நகரவாசிகள் மாமரத்திற்கு முன்பாக ஒரு கோவில் அமைத்து ஒரு கையில் படியுடன் கூடிய அம்பாள் விக்ரகத்தை அமைத்து வழிபட்டு வந்தனர். 1972ம் ஆண்டு இயற்கை சீற்றத்தில் அந்த மாமரம் முறிந்தது. அதனை  அப்பகுதி மக்கள் அன்னை யமுனாம்பாள் இறைநிலையோடு மீதம் இருந்த மாமரத்தை செப்பு கவசம் இட்டு இன்றும் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஏன தின உற்சவமாக மிக பிரம்மாண்டமாக திருவிழா நடத்தி வருகின்றனர். இங்கு திருமணம், தீர்க்கசுமங்கலி, புத்திரர், சுகப்பிரசவம், கல்வி மேம்பாடு, அரசு, அரசியல் பதவி உயர்வு உள்ளிட்ட 16 வகையான  பாக்கியங்களை வேண்டி அம்பாளை வணங்கி உயர்வு பெற்றவர்கள் அதிகம் உள்ளனர். பட்டத்து அரசியாக இருந்து தனது பக்தி பெருக்கத்தால் இறைவனுடன் ஐக்கியமான தெய்வ மங்கை ஞான சித்தருமான அன்னை யமுனாம்பாள் கோவில் பழுதடைந்திருந்தது.

தற்போது ரூ.30 லட்சம் செலவில் புதிதாக கட்டி பிப்ரவரி 6ம்தேதி கும்பாபிஷேகம் நடக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளவர்கள்  கோவில் நிர்வாகத்தை 9442951265, 9442240296 மற்றும் 9488109428 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar