பதிவு செய்த நாள்
03
பிப்
2014
10:02
நாகப்பட்டினம் : வைணவர்களின், 108 வைணவ திவ்ய தேசங்களில், 18வது திவ்ய தேசமான, நாகை, சவுந்திரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 30ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தன. நேற்று காலை, 5:30 மணிக்கு, யாகசாலை 5ம் கால பூஜை, காலை, 8:00 மணிக்கு, யாத்ராதானம், கும்ப, பிம்ப உத்தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. காலை, 10:30 மணிக்கு, விமானங்களில், புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில், ஆட்சியர் முனுசாமி உட்பட, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.