Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செண்பகவல்லி அம்மன் கோயிலில் ... காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா! காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
200 ஆண்டுகளாக எரியும் அக்னி குண்டம்: பயிர்களை விபூதி காப்பதாக நம்பிக்கை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 பிப்
2014
10:02

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரி என்ற செல்லியம்பாளையத்தில் உள்ள சங்கிலி சுவாமிகள் கோவிலில் 200 ஆண்டுகளாக தொடர்ந்து அக்னி குண்டம் அணையாமல் எரிய வைக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் மாதவச்சேரி என்ற செல்லியம் பாளையம் உள்ளது. இப்பகுதிக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலத்திலிருந்து ஒரு சித்தர் வந்தார். கன்னடம், தமிழ் மொழி பேசியதால், கன்னட சித்தர் என்று அழைத்தனர். இவர், தன்னுடன் சங்கிலி, குரடு வைத்திருந்ததால் சங்கிலி சுவாமிகள் என அழைக்கப்பட்டார். இவரின் குரு சீரடி மஸ்தான் என்பவர். சங்கிலி சுவாமிகள் இப்பகுதிக்கு வந்தபோது மாதவச்சேரி கிராம மக்கள் காலரா நோயால் பாதித்து இறந்துள்ளனர். அங்கு வந்த சங்கிலி சுவாமிகள் அக்னி குண்டத்தை ஏற்படுத்தி, அதில் தான் வைத்திருந்த சங்கிலியை சுட வைத்து, தன் இடுப்பில் கட்டிக் கொண்டு,  கிராமத்தை சுற்றி வந்துள்ளார். அதன் பிறகு கிராமத்தில் யாருக்கும் காலரா நோய் ஏற்படவில்லை. இதனால் அன்றிலிருந்து அக்னி குண்டத்தை அணையாமல் கிராம மக்கள் விறகு போட்டு எரிய வைத்து வருகின்றனர். இவர் சென்ற  ஊர்களிலும் "அச்சரக்கல் என்ற கல்லினை ஊரின் வாயு மூலையில் நட்டுவைத்துள்ளார். அதற்கு சான்றாக அந்த கல் இன்றும் கச்சிராயபாளையம், தாவடிபட்டு, பால்ராம்பட்டு, தலைவாய் பட்டி, திருவெண்ணைநல்லூர் போன்ற பல ஊர்களில் உள்ளது. அதில் ஏதோ புரியாத மொழியில் எழுதியுள்ளது. அக்னி குண்டத்தில் எடுத்து வந்த விபூதியை தங்கள் வயல்களில் தூவினால் எலி, பாம்பு போன்ற விலங்குகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. விளைச்சல் அதிகரிக்கும் என்றும் இக்கிராம மக்கள் நம்புகின்றனர். சங்கிலி சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் அவரது சீடர் நிர்வாண மவுன குரு  கோவில் ஒன்றை உருவாக்கினார். கிராம மக்கள் தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், நெல், அரிசியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குகின்றனர். இதனைக் கொண்டு இக்கோவிலில் வியாழன் கிழமைகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. வேண்டுதல் வைத்துள்ள மக்கள் அக்னி குண்டத்திற்கு விறகுகளை காணிக்கையாக தருகின்றனர். இந்த கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar