Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாதோபாசனை நடத்திய கிருஷ்ணா வள்ளிமலை முருகன் கோவில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமல விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2014
11:02

திருத்தணி : திருத்தணி கமல விநாயகர் கோவிலில், நேற்று நடந்த, கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருத்தணி, அக்கைய்யா சாலை, வாட்டர் டேங்க் பகுதியில், கமல விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில், திருப்பணிகள், ஐந்து லட்சம் செலவில் நடந்தன. மேலும், நவகிரக சிலைகளும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை ஓட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாக சாலை, 21 கலசங்கள் அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம் மற்றும் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மூலவர் விநாயகர் மற்றும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரகங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar