சிதம்பரம்: சிதம்பμம் அடுத்த குச்சிப்பாளையம் கன்னி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 11ம் தேதி காலை 10:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்ரக ஹோமமும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிμவேசபலி,முதல் கால யாக பூஜை மற்றும் சுவாமிகளுக்கு பொன்,வெள்ளி சமர்பித்து அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது.நேற்று முன்தினம் (12ம் @ததி) காலை 6:00மணிக்கு இμண்டாம் கால யாகபூஜை நடந்தது. நாடிசந்தானம், தத்துவார்ச்சனை மற்றும் கடம் புறப்பாடுசெய்து காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்மகா கும்பாபிஷேகம் நடந்தது.