பதிவு செய்த நாள்
20
மார்
2014
10:03
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, சர்வ தீர்த்த குளத்தில், தீர்த்தவாரி நடந்தது. காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் கடைசி நாளான நேற்று, சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரிக்காக, பகல், 11:30 மணிக்கு, கோவிலில் இருந்து, சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பட்டார். நான்கு ராஜ வீதிகள் உலா வந்து பிற்பகல், 2:00 மணிக்கு, சர்வ தீர்த்தகுளம் வந்தடைந்தார். அங்கு சந்திரசேகராக கருதப்பட்ட சூலாயுதத்திற்கு, குளத்தில் வைத்து, யாகத்திற்காக வைத்திருந்த புனித நீரால், அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன அதன் பின்னர், மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சந்திரசேகருக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர், ரிஷப வாகனத்தில் கோவிலுக்கு திரும்பினார். ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், நேற்றுடன் நிறைவு பெற்றது.