Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவில் விழா இன்று கோலாகல ... ஊட்டியில் மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா ஊட்டியில் மீனாட்சி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்: சென்னிமலையில் ஏப்., 13ல் ஏற்பாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2014
11:03

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா, ஏப்ரல், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய தலங்களில், சென்னிமலை மலை மீது அமைந்துள்ள முருகன் கோவிலும் ஒன்று. இம்மலை கோவிலில் தான், பாலதேவராய சுவாமிகள் அருளிய, கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அருணகிரி நாதரும், திருப்புகழில் சென்னிமலை முருகப்பெருமானை துதித்து, ஐந்து பாடல்கள் பாடி உள்ளார். வேறு எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பாக, இங்கு தினமும் முருப்பெருமானுக்கு எருதுகள் மூலம், 1,320 படி வழியாக, திருமஞ்சனம் கொண்டு செல்வது போன்ற, அநேக அதிசயங்கள் கண்டது இச்சென்னிமலை. இங்கு முருகனுக்கு, தைப்பூசதேர், பங்குனி உத்திர தேர் என, இரண்டு திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் ஏப்ரல், பத்தாம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 11ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 12ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 13ம் தேதி காலை, ஐந்து மணிக்கு மேல், ஆறு மணிக்குள், ரதாரோகணக்காட்சியும், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை, ஏழு மணி முதல் தேவஸ்தான மண்டபத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பில், அன்னதானம் நடக்கிறது. அன்று மாலை, ஐந்து மணிக்கு தேர் நிலை சேரும். 14ம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி காலை, எட்டு மணிக்கு மகாதரிசனம் நிகழ்ச்சியும், இரவு எட்டு மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையாளரும், தக்காருமான சபர்மதி, கோவில் செயல் அலுவலர் பசவராஜன், தலைமையில் தலைமை எழுத்தர் ராஜீ, ஸ்ரீபூசாரி வேளாளத் தம்பிரான் கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar