Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன்மலை கோவிலில் திருப்பணி தீவிரம்! திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2014
12:03

சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா, நாளை (மார்ச் 29) இரவு 10:05 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம், குழந்தை வரம் வேண்டி நேர்த்தி செலுத்தினால், நிறைவேறும் என்பது ஐதீகம். தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொடியேற்றம்: இக்கோயிலில் பங்குனி திருவிழா, நாளை (மார்ச் 29) இரவு 10:05 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், அதை தொடர்ந்து கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மார்ச் 30 முதல் ஏப்.4ம் தேதி வரை தினமும் இரவு சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் அம்மன் வீதி உலா வருவார். ஏழாம் நாளான ஏப்.5-ல் பொங்கல் வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன், பொங்கல் வைத்து வழிபடுவர். எட்டாம் நாளான, ஏப்.6-ல் அம்மனின் மின்ரத ஊர்வலம் நடக்கும். ஒன்பதாம் நாளான, ஏப்.7 அன்று காலை 7:35 மணியில் இருந்து அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் சுமத்தல், மாவிளக்கு எடுத்தல் உட்பட பல்வேறு நேர்த்தி செலுத்துவர். அன்று மாலை 6 மணிக்கு, ஊஞ்சல் உற்சவமும்; இரவு 10 மணிக்கு, அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளலும் நடக்கிறது. பத்தாம் நாளான, ஏப்.8 அன்று இரவு 8 மணிக்கு, தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.

சிறப்பு பஸ்கள்:
சிவகங்கை, பரமக்குடி, இளையான்குடி, மானாமதுரை, மதுரை, காரைக்குடி, சாயல்குடி, கடலாடியில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பரம்பரை அறங்காவலர் எம்.வெங்கடேசன் செட்டியார் தலைமையில், ஏற்பாடுகள் நடக்கிறது. கோவில் விழா சார்ந்த விபரங்களுக்கு, 04564 - 206 614-ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar