Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தட்சிணாமூர்த்திக்கு தேர்வு ... திருவள்ளூர் ஞான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் அருகில் டாஸ்மாக் கடை: குடிமகன்கள் ரகளை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2014
11:03

ஆத்தூர்: ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில், மது அருந்தும் குடிமகன்கள் பலர், சாலையில் படுத்தும், கடைகள் முன் அமர்ந்து ரகளை செய்வதாலும், பொதுமக்கள் கடும் வேதனையடைகின்றனர். ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், இந்து அறநிலையத் துறை அலுவலகம், வணிக வளாக கடைகள் உள்ளன. இக்கோவில் அருகில், அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு, மது அருந்த வரும் குடிமகன்கள், போதை தலைக்கேறிய நிலையில் ரகளை செய்வதோடு, சாலையில் படுத்தும் இடையூறு செய்கின்றனர். அதனால், தியேட்டர், மருத்துவமனை, குடியிருப்புக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். நேற்று மதியம், பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முருகன் என்பவர், போதை தலைக்கேறிய நிலையில், கொளுத்தும் வெயிலில் சாலையில் படுத்து ரகளை செய்தார். போலீஸாருக்கு தகவல் அளித்தும் யாரும் வராததால், பஸ்ஸில் வந்த பயணிகள் உள்ளிட்டோர், சாலையோரம் அப்புறப்படுத்தினர். அவ்வழியாக சென்ற பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், முகம் சுளித்தபடி சென்றனர். எனவே, கோவில் அருகில் உள்ள, மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar