Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் சீதா-ராமர் ... உடுமலை  ஷீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமி விழா உடுமலை ஷீரடி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்ஷய திரிதியை முன்னிட்டு காலடியில் கனகதாரா யாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஏப்
2014
11:04

ஆதிசங்கரர்,  இந்து மதத்தின் குலகுருவான இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் மேற்கொண்டிருந்த போது, ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என்று பிøக்ஷ கேட்டார்.  அந்த பெண் தன்னிடமிருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார். இந்த தானம் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்படையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். இதனால் மகிழ்ந்த மகாலட்சுமி, இவர் 19 ஆம் ஸ்லோகம் பாடிய போது, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.

இதன் அடிப்படையில்  கேரளா மாநிலம் காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கனகதாரா யாக மண்டபத்தில் ஏப்ரல் 30 முதல் மே 4ம் தேதி வரை கனகதாரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் மற்றும் கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகளால் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகளால், அட்சய திரிதியான மே 2ம் தேதி, காலை 9 மணிக்கு மகாலட்சுமி விக்ரகத்திற்கு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. கனகதாரா யாகம் முடிந்ததும், அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நெல்லிக்கனி மற்றும் எந்திரத்தை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

கனகதாரா எந்திரம்  ரூ.      351
தங்க நெல்லிக்கனி  ரூ. 12,001
வெள்ளி நெல்லிக்கனி  ரூ.   2001
பிராமண போஜனம்  ரூ.   3,501
லெட்சுமி நாராயண அபிஷேகம்  ரூ. 17,001
பிராமண தட்சிணை  ரூ.     1001
அன்னதானம்  ரூ.   6001
கனகதாரா அர்ச்சனை  ரூ.     101
நெல்லிக்கனி பாரா  ரூ.       51
நெல்லிக்கனி சமர்ப்பணம்  ரூ.       11

தொடர்புக்கு: காப்பிள்ளி ஸ்ரீகுமார் நம்பூதிரி, மேனேஜிங் டிரஸ்டி, ஸ்ரீகிருஷ்ணன் கோயில், காலடி - 683 574, எர்ணாகுளம் மாவட்டம். போன்: 093888 62321,

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar