Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புற்று மாரியம்மன் கோவிலில் ... மதுரை தண்டாயுதபாணி கோயிலில் விளக்கு பூஜை மதுரை தண்டாயுதபாணி கோயிலில் விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் வசந்த மண்டபம் இடிப்பு: பக்தர்கள் கொதிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஏப்
2014
11:04

சென்னை : வில்லிவாக்கம், அகஸ்தீஸ்வரர் கோவில் வசந்த மண்டபத்தை இடித்தும், நவக்கிரக சிலைகளை இடமாற்றியும் வைத்த, இந்து சமய அறநிலைய துறையினரின் நடவடிக்கையால், பக்தர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.வில்லிவாக்கத்தில், 400 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இந்த கோவிலில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கின.

ரூ.18 லட்சத்தில்... அப்போது, கோவிலில் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும், பக்தர்களிடம் ஆலோசிக்கப்படும் என, இந்து சமய அறநிலைய துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சொர்ணாம்பிகை அம்மனுக்கு, நேர் எதிரே இருந்த நவகிரக சிலைகள், திருப்பணிக்காக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2008ல், 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, வசந்த மண்டபமும் திருப்பணி என்ற பெயரில், பக்தர்களிடம் எவ்வித ஆலோசனையும் பெறாமல், இடிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரத்தில் நடந்த இந்து சமய அறநிலைய துறையின் இந்த நடவடிக்கைகள், பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:கடந்த, ஆறு ஆண்டுகளாக,வசந்த மண்டபம் நல்ல நிலையில் இருந்தது. ஆனாலும், திருப்பணி என்ற பெயரில், மண்டபத்தை இடித்து உள்ளனர். அதுகுறித்து, பக்தர்களிடமோ, ஆன்மிக சங்கங்களிடமோ, ஆலோசனை கேட்கவில்லை. இதனால், பக்தர்கள் வழங்கிய, 18 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை குறித்து, அறநிலைய துறை உயர் அதிகாரிகள், உடனடியாக விசாரிக்க வேண்டும். விரயமான, 18 லட்சம் ரூபாயை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அனுமதி பெற்று... இதுகுறித்து, செயல் அலுவலர் தேன்மொழி கூறியதாவது: வசந்த மண்டபம், கட்டப்பட்டிருந்தது ஆகம முறைப்படி தவறு என கண்டறியப்பட்டது. அதனால், தற்போது இடிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும் மண்டபம் மீண்டும் கட்டப்படும். மேலும், நவகிரக சன்னிதி, கோவிலின் அக்னி மூலையில் இருந்தது. ஆகம முறைப்படி, அவற்றை ஈசான மூலைக்கு மாற்றி கட்டியுள்ளோம். இவற்றிற்கான அனுமதி, இந்து சமய அறநிலைய துறையிடம் உரிய முறையில் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar