வரதராஜப் பெருமாள் கோவிலில் சீதா திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2014 10:04
நெட்டப்பாக்கம்: நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி ராமர், சீதை திருமணக் கோலத்தில் சன்னதி புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவை, இரவு 7.௦௦ மணிக்கு மாலை மாற்றும் வைபவம் நடந்தது.இரவு 8.30 மணிக்கு புண்ணியாகம், கங்கணதாரணம், வாரணமாயிரம் வாசித்தல், சீர்பாடல், ஆசிர்வாதம் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தன. பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.