Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேரளாவில் விஷு கோலாகல கொண்டாட்டம்! சாமியாடிகள் மூலம் மனநோய்கள் தீர்க்கும் புதுமை! சாமியாடிகள் மூலம் மனநோய்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஏப்
2014
10:04

அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஸ்ரீதேவி, பூமாதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு சுந்தரராஜ பெருமாள் மங்கள நாண் அணிவித்து திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயில் பங்குனித் திருவிழா ஏப்., 11ல் துவங்கியது. நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது. காலை 9.15 மணிக்கு மணமக்கள் திருமண அலங்காரம் முடிந்து, பல்லக்கில் புறப்பட்டனர். காலை 9.45 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தனர். காலை 10.30 மணிக்கு ஹோமம் வளர்க்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. பின், சுவாமி, அம்பாள்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, கோ பூஜை, மங்கள ஆராதனைகள் நடந்தன. திருகல்யாண பட்டாடைகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை 11.15 மணிக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு கொண்ட பாக்கெட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar