அனுப்பர்பாளையம் : அனுப்பர்பாளையம் புதூ ரில் உள்ள சித்தி விநாயகர், கருப்பராய சுவாமி, கன்னிமார் சுவாமி கோவிலில் பொங்கல் விழா, ஏப்., 30ம் தேதி துவங்கியது. நேற்று (7ம் தேதி) காலை 6.00 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (8ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.00 மணிக்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது.