தீவனூர் மாரியம்மன் கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2014 12:05
திண்டிவனம்: தீவனூர் மாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மன் புதியதாக அமைத்து, வைகாசி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. திண்டிவனம் அடுத்த தீவனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 1972ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேகம் 1991ம் ஆண்டு நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடந்த மண்டல பூஜையில், மூலவர் அம்மன் சிலை இடது கையின் உடுக்கை உடைந்தது. 23 ஆண்டுகளுக்கு பின், தற்போது அந்த மூலவர் அம்மன் சிலையை மாற்றி வரும் வைகாசி 22ம் தேதி கும்பாபிஷேகம் செய்கின்றனர். இதையொட்டி, 15 நாட்களுக்கு முன், புதியதாக மூலவர் அம்மன் சிலை வாங்கிவந்து, தண்ணீரில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. நேற்று தன தானியங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தீவனூர் லட்சுமிநாராயணபெருமாள் கோவில் பரம்பரை தர்மகர்த்தா நாமக்காரர் முனுசாமி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.