Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளழகருக்காக மதுரை சென்ற ஸ்ரீவி., ... கண்டாங்கி பட்டுடன் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்! கண்டாங்கி பட்டுடன் மதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை இஸ்கான் கோயிலில் நரசிம்ம அவதாரத் திருநாள் விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மே
2014
05:05

மதுரை: மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் மே 13ம் தேதி செவ்வாய் அன்று ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணி முதல் ஸ்ரீஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மரின் திருவிக்ரஹங்களுக்கு மஹாஅபிஷேகமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற இருக்கிறது. மே 13ம் தேதி- நரசிம்ம சதுர்தசி நாளாகும். அதாவது ஸ்ரீநரசிம்மர் அவதரித்த திருநாளாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் எண்ணற்ற அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிகவும் பிரசித்தி பெற்ற அவதாரங்களில் ஒன்றாகும். இந்த அவதாரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தனது பக்தன் பிரகலாதனுக்காக விசேஷமாக அவதரித்தார். இந்நாளன்று சாயங்காலம் (சந்தியாக்காலம்) வரை விரதம் இருந்து நரசிம்மரை பிரார்த்தித்தால் எல்லா விதமான விக்னங்களும் விலகி விடும்.

இதற்காக இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் அன்று மாலை 6 மணி முதல் ஸ்ரீஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில் ஹரி நாம யக்ஞம், மஹா அபிஷேகம், நரசிம்ம பிரார்த்தனை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம் பெறும். விழாவினை இஸ்கான் மதுரை கிளையின் தலைவர் அருட்திரு. சங்கதாரி தாஸ் அவர்கள் துவக்கி வைக்கிறார். மஹா அபிஷேகத்திற்காக ஒன்பது கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு பூஜிக்கப்பட உள்ளது. தவிர, பால், பழம் உள்ளிட்ட பஞ்சராத்ரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. அபிஷேகத்தின்போது பகவானை புகழ்படுத்துவதற்காக ஹரி நாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை பற்றிய சிறப்புரையும் நடைபெற உள்ளது.

உங்களுக்கும் உண்டு..: பகவான் ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு அவருடைய கருணைணைப் பெற ஸ்ரீநரசிம்ம பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும், விரதம் இருப்பது, கைங்கர்யம் செய்வதும் நல்லது. இவ்விரதத்தை நரசிம்ம அவதார நேரமான இரவும் அல்லாத பகலும் அல்லாத சந்தியா நேரத்தில் (சாயங்கால வேளை வரை) முடித்து ஸ்ரீநரசிம்மரின் அருளைப் பெறலாம். இஸ்கான் கோயிலில் ஸ்ரீஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் விக்ரஹங்களுக்கு கலசாபிஷேகமும் மற்றும் பல விசேஷ பூஜைகளும் மாலை 6 மணிமுதல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு, பகவான் ஸ்ரீநரசிம்மரை வழிபடுவதன் மூலம் ஸ்ரீநரசிம்மரின் கருணைக்குப் பாத்திரமாகலாம்.

பிரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீல வியாச தேவர் அருளியது:  விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை, மணிநகரம், ஹரே கிருஷ்ணா கோயில், இஸ்கான் பக்தர்கள் குழு  செய்து வருகிறது.

நரசிம்ம அவதாரத் திருநாள் (மே-13): பிரகலாதன் என்ற பக்த குழந்தையை காப்பாற்ற பகவானே அவதாரம் செய்த சதுர்தசி நாள் தான் ஸ்ரீநரசிம்ம சதுர்தசியாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் வரும் மே 13ம் தேதி செவ்வாய் கிழமை இவ்விழா கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் பகவான் அவரது தூய பக்தர்களின் மகிழ்ச்சிக்காகவே தோன்றுகிறார். அதாவது இங்கு அசுரகுல தலைவனான ஹிரண்யகசிபுவை கொல்வதற்காக என்பதைவிட, பக்த பிரகலாதரை காப்பாற்றவே அவதாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பக்தரைக் காத்து, தீயவரை அழிப்பதற்காக யுகந்தோறும் தான் தோன்றுவதாக கூறுகிறார். ஆனால் இறைவனின் இந்த அவதாரம், தனது தூயபக்தரின் வார்த்தைகளை நிரூபிப்பதற்காகவும், பக்தன் மீது தான் கொண்டுள்ள அளவு கடந்த பிரியத்தையும் காட்டுகிறது. இத்தகைய நரசிம்ம அவதார தினத்தில், பகவான் நரசிம்மரைப் பற்றியும், பக்த பிரகலாதரைப் பற்றியும் நினைப்பது மிகவும் அவசியமானதாகும்.

பயப்படாதே பிரகலாதா! இதோ வந்து விட்டேன்...!!

பக்தரைக் காக்க வந்த அவதாரம்- பகவான் ஸ்ரீநரசிம்மர்!

தன் மகன் என்றும் பாராமல் சொல்லொண்ணா இடர்களை அளித்த அசுரர்களின் தலைவன் ஹிரண்யகசிபு ஒரு முறை பிரகலாதனை அழைத்து, மகனே பிரகலாதா! நீ கல்வி கற்றதில் மிகவும் சிறப்புடையது எது? என்று கேட்டார். அதற்கு பிரகலாதனோ, தந்தையே! பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தைக் கேட்பதும், பாடுவதுமான செயல்களே மிகவும் சிறப்புடையது என்று பதிலளித்தார். இதைக்கேட்ட ஹிரண்யகசிபு கோபத்துடன் மூடனே பிரகலாதா! நான் கோபப்படும் போது மூவுலகங்களும் அவற்றின் அதிபதிகளும் கூட நடுங்குகின்றனர். யாருடைய பலத்தினால் அயோக்கியானான நீ, என் அதிகாரத்தையும் மீறும் அளவிற்கு பயமற்று, இப்படி புத்தியற்றவன் ஆனாய்? என்று கர்ஜித்தார். அதற்கு பிரகலாதர். அரசே, என்னுடைய பலத்திற்கு மூலம் எதுவோ, அதுவே தங்களுடைய பலத்திற்கும் மூலமாகும். உண்மையில் எல்லா வகையான பலத்திற்கும் ஆதிமூலம் ஒன்று தான் அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும், மற்றுமுள்ள எல்லா பலசாலிகளுக்கும் ஒரே பலமாக விளங்குகிறார். அவர் அன்றி எவராலும் எந்த சக்தி யையும் பெற முடியாது. பிரம்ம தேவர் உட்பட, அசைவன, அசையாதன, உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பலத்தினான் தான் ஆளப்படுகின்றனர். அவரே தன் சொந்த சக்திகளால் இப்பிரபஞ்சத் தோற்றத்தை படைத்துக் காத்து, அழிக்கிறார் என்றார் பிரகலாதர். இதைக்கேட்ட ஹிரண்யகசிபுவின் கண்கள் சிவந்தன. ஏய் பிரகலாதா! என்னைத் தவிர வேறொரு உயர்ந்த ஜீவன் இருப்பதாகவும், அவர் அனைத்திற்கும் மேலானவர் என்றும் அனைவரையும் ஆள்பவர் என்றும், எங்கும் நிறைந்திருப்பவர் என்று தானே கூறுகிறாய்! அப்படியென்றால் அவர் எங்கு இருக்கிறார். அவர் எங்கும் நிறைந்திருப்பவர் என்றால் இந்த தூணில் இருக்கிறாரா? என்று தன் அரியணை முன்னால் இந்த ஒரு தூணைக் காட்டி கூச்சலிட்டான் ஹிரண்யகசிபு. பிரகலாதரோ. ஆம் தந்தையே! என் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று பயமின்றி பதில் அளித்தார்.

அப்படியென்றால் இக்கணமே உன் உடலிலிருந்து உன் தலையை துண்டிக்கப் போகிறேன். உன் கடவுள் வந்து உன்னைக் காப்பாற்றட்டும் என்று திரும்பத் திரும்ப பிரகலாதரை சபித்தபடி தான் வாளை எடுத்துக் கொண்டு சிம்மாசனத்திலிருந்து பாய்ந்து வந்து, கடுங்கோபத்துடன் தன் முஷ்டியால் தூணில் குத்தினான் ஹிரண்யகசிபு. உடனே அத்தூணிலிருந்து அதிபயங்கரமான சப்தம் உண்டாயிற்று. அது அண்டசராசரத்தையே பிளந்து விடுவது போல் காணப்பட்டது. கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற பிரகலாதரின் கூற்றில் சிறிதும் தவறில்லை என்று இரண்யகசிபுவை நம்பச் செய்வதற்காக தூணிலிருந்து வெளிப்பட்ட பகவான், பிரகலாதனிடம் பயப்படாதே பிரகலாதா! இதோ வந்து விட்டேன் என்று தைரியப்படுத்தினார். அப்போது அவரது ரூபம் மனிதருமல்லாத, சிங்கமுமல்லாத அதியற்புதமான ஸ்ரீநரசிம்மத் தோற்றமாக இருந்தது. கண்கள் கனலைக் கக்குவது போன்று காணப்பட்டது.

பிறகு தனது கூரிய நகங்களால் இரண்யகசிபுவை வதம் செய்து, தன் பக்தன் என்றும் அழிவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார் பகவான் ஸ்ரீநரசிம்மர். பிறகு பிரகலாதர் பகவானை பிரார்த்தனை செய்து அவரது பாதகமலங்களில் வீழ்ந்து வணங்கி சாந்தப்படுத்தினார். விக்கினங்கள் அனைத்தையும் தீர்க்கும் பகவான் ஸ்ரீநரசிம்மர்!

பகவான் ஸ்ரீநரசிம்மர் பக்தர்களின் பாதுகாவலரும், விக்கனங்கள் அனைத்தையும் தீர்ப்பவரும் ஆவார். பகவான் ஸ்ரீநரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருவதால் அனைத்து விக்கினங்களும் விலகிவிடும். யாருடைய பாதங்களை விநாயகர் தன் தந்தங்களில் ஏந்தியிருப்பதால், விக்னங்கள் தீர்க்கும் சக்தியைப் பெறுகிறாரோ அந்த முழுமுதற்கடவுளான கோவிந்தரை நான் வழிபடுகிறேன் என்று பிரம்ம சம்ஹிதையில் பிரம்மா கூறுகிறார். அதாவது, பகவான் ஸ்ரீநரசிம்மரின் பாதங்களை தன் தந்தங்களில் ஏந்திக் கொண்டிருப்பதால் விநாயகருக்கு விக்கினம் தீர்க்கும் சக்தி கிடைப்பதாக குறிப்பிடுகிறார்.

பிரகலாதரின் பிரசித்தி பெற்ற உபதேசங்கள்!

பிரகலாதர் மிகவும் தூய பக்தராவார். இவருடைய பக்தியினாலும், எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் இடையறாது பகவானை நினைத்த குணத்தாலும் தான் பகவானே நரசிம்மராக அவதாரம் செய்தார். இத்தகைய பிரகலாதரின் கிருஷ்ண பக்தி உபதேசங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

கிடைத்ததற்கரிய மனித பிறவி நிலையற்றது என்றாலும், அர்த்தமுள்ளதாகும். ஏனெனில் இதன் மூலம் ஒருவர் பகவானுக்கான பக்தித் தொண்டை செய்ய முடியும். ஆனால் அந்த மனித வாழ்க்கை நாம் வீணடிக்கக் கூடாது. பொதுவாக மனிதனின் கிடைத்தற்கறிய வாழ்வு காலம் எப்படி வீணாகிறது என்பதைப் பற்றி ஒரு முறை பக்த பிரகலாதர் விளக்கினார். ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் ஆயுட்காலம் உள்ளது. ஆனால் இதில் பாதிகாலம் தூங்குவதிலேயே கழிந்து விடுகிறது. ஏனெனில் அறியாமையில் மூழ்கியுள்ள அவன் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் தூங்குகிறான். எனவே அவனுக்கு வாழ்வில 50 வருடங்களே மிஞ்சுகின்றன. அடுத்து அறியாப் பருவமான குழந்தைப் பருவத்தில் 10 வருடங்கள் கழிந்து விடுகின்றன. இளமைப் பருவத்தில் விளையாட்டுகளில்  ஈடுபடுவதால் அடுத்த 10 வருடங்கள் கழிகின்றன. இப்படியாக 20 வருடங்கள் வீணாகின்றன. அதே போல முதுமைப் பருவத்தில் ஒருவன் தன்னுடைய அன்றாட செயல்களை கூட சரிவர செய்ய முடியாத நிலையில் மற்றுமொரு 20 வருடங்கள் வீணாகின்றன. எஞ்சிய வருடங்கள் கிருஷ்ண உணர்வற்ற வெறும் புலன்களை மட்டும் திருப்திப்படுத்தும் குடும்ப வாழ்க்கையில் வீணாகிறது. எனவே எனதருமை நண்பர்களே! தயவு செய்து பகவானின் நாமத்தை உச்சரித்து, கேட்டு அவரது பக்தித் தொண்டில் ஈடுபடுங்கள். மனப்பூர்வமாக ஸ்ரீகிருஷ்ணருக்குச் செய்யப்படும் சிறிதளவு பக்தித் தொண்டு கூட ஒருவருக்கு முழுபூரணத்துவத்தை அளிக்க வல்லது. இது போன்ற பிரகலாதரின் உபதேசங்கள் பல மிகவும் விளக்கமாக பழமை வாய்ந்த வேத இலக்கியமான ஸ்ரீமத் பாகவதத்தின் ஏழாவது காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரகலாதர் கூறும் இந்த உயரிய நல்வழியை பின்பற்றும் ஒருவர் பகவான் ஸ்ரீநரசிம்மரின் கருணையை பெறுவது உறுதியே.

16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் கோயில்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 
temple news
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் ... மேலும்
 
temple news
கோவை ; டி பெருக்கை  முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar