பத்ரகாளியம்மன் கோயில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2014 05:05
காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா நடந்தது. காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில், கடந்த மாதம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா கடந்த 5ம்தேதி அம்மனுக்கு பூர்வாங்க அபிஷேக ஆராதனைகள் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை ஒட்டி தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. அதைத்தொடர்ந்து, இரவு மகிஷ சம்ஹார நினைவு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நேற்று இரவு எல்லை ஓடுதல்,அம்மன் திருத்தேர் வீதியுலா நிகழ்ச்சிகள் வரும் ஜூன் 3ம்தேதி உதிரவாய் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கோயில்கள் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி உட்படபலர் கலந்து கொண்டனர்.