Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ... சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் கொடியேற்றம்! சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரகோட்டம் முருகன் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2014
11:06

காஞ்சிபுரம்: குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமை<யான கோவில்களில் குமரகோட்டம் முருகன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 12 நாள் பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம்.  இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு வள்ளி – தெய்வானையுடன் சுவாமி திருவீதி உலா வந்தார். இரவு மேஷ வாகனத்தில் முருகர் திருவீதிவுலா சென்றார். வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ளது வல்லக்கோட்டை. இக்கிராமத்தில், வள்ளி, தெய்வானை உடனான, சுப்பிரமணிய சுவாமி, 7 அடி உயரத்தில் நின்ற கோலத்தில், எழுந்தருளி உள்ளார்.  இக்கோவிலில், ஐந்தாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவம் நேற்று, காலை 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை ஒட்டி, சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தன. ஏராளமான பக்தர்களுடன், வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன், கொடியேற்றப்பட்டது. அதைதொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், வள்ளி, தெய்வானை உடனான சுப்பிரமணிய சுவாமி, விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்த்ராயர் ஆகியோர் எழுந்தருளி, வீதி உலா வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar