Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணாடி கேட்கும் கற்குடை அய்யனார்! கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ராகுகேது பெயர்ச்சி பூஜை! கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம்- கீழப்பெரும்பள்ளதில் ராகு, கேது பெயர்ச்சி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2014
05:06

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளதில் சௌந்தரநாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள தனி சந்நிதியில் நவகிரகங்களில் கேது பகவான் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஒன்னரை ஆண்டுக்குஒரு முறை பின்னோக்கி பெயரக்கூடிய கேது பகவான் மேஷ ராசியிரிருந்து மிதுன ராசிக்கு பிரவேசித்தார். இதையோட்டி கேது பகவானுக்கு பரிஹார ஹோமும், சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. காலை 11: 12 மணிக்கு மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது. கேது பெயர்ச்சியையடுத்து தோஷ பரிஹாரம் செய்ய வேண்டிய மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருட்சகம், தனுசு, கும்பம், மீனம் ராசிகளையுடைய பக்தர்கள் கேது பகவானுக்கு பரிஹாரம் செய்து தரிசித்தனர். கேது பெயர்ச்சி பூஜைகளை மணிபட்டு குருக்கல், கார்த்திகேய குருக்கல், கல்யாண குருக்கல் ஆகியோர் பூஜைகளை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன் செய்திருந்தார்.

Default Image
Next News

இதுபோல தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் கோயில் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்சி விழா நடந்தது. ராகு பகவான் காலை 11:12 மணிக்கு துலாம் ராசியிலிருந்து கண்ணி ராசிக்கு பிரவேசித்தார். அதனை முன்னிட்டு ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சங்கர் குருக்கள் தலைமையிலானோர் சிறப்பு ஹோமம், பூஜைகளை நடத்திவைத்தனர். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு தோஷபரிஹாரம் செய்ய வேண்டிய ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருட்சகம், மகரம், மீனம் ராசிகளையுடைய பக்தர்கள் ராகு பகவானுக்கு பரிஹாரம் செய்து தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசனம் செய்தனர்.ராகு, கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநாகேஸ்வரன் கோயில், கீழப்பெரும்பள்ளத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா ... மேலும்
 
temple news
திருச்சி; கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சொக்கப்பனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar