Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அண்ணாமலையார் கோவிலில் ஆனி ... நெல்லையப்பர் தேரில் பைபர் குதிரைகள்: ஆகம விதிமுறை மீறல் என புகார்! நெல்லையப்பர் தேரில் பைபர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
100 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2014
10:07

திருப்பரங்குன்றம்: மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் உள்ள விளாச்சேரியில் 700 ஆண்டு பழமையான சீதா, லக்ஷ்மண சமேத ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் ராமபிரான், திருக்கல்யாண கோலத்தில் வலது புறம் சீதா தேவி அமர்ந்தும், இடதுபுறத்தில் லக்ஷ்மணர் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார்.  அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கூட சீதா தேவி ராமருக்கு இடது புறத்தில் அமர்ந்துள்ளார்.

கடைசியாக 1903ல் கும்பாபிஷேகம் நடந்துள்ள இக்கோயிலுக்கு, சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்கள் தலைமையில் நாளை காலை 5.30 முதல் 6.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதை முன்னிட்டு 4.7.14 அன்று முகூர்த்தகால் ஊன்றப்பட்டது. பரம்பரை தர்மகர்த்தா சிவராம், திருப்பணிக்குழுத்தலைவர் மரகதவல்லி, பொருளாளர் சங்கர நாராயணன், செயலாளர் கண்ணன் கலந்து கொண்டனர். ஜூலை 7 முதல் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. ஜூலை 6 முதல் 13 வரை திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயணதொடர் சொற்பொழிவு நடக்கிறது.

இக்கோயிலுக்கு தளம், சுற்றுச்சுவர், யாகசாலை, வேத விற்பன்னர்கள் சம்பாவணை, வர்ணம் சுதல், அன்னதானம், கும்பாபிஷேகம் என பல திருப்பணிகள் நடைபெற பெருந்தொகை தேவைப்படுகிறது. ஒரு கோயிலின் கும்பாபிஷேகத்தை தரிசித்தாலே பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.  அதிலும் இது போன்ற மிகப்பழமையும் பெருமையும் மிக்க கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு பொருளதவி செய்தால் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் ஏழேழு ஜென்மத்திற்குரிய புண்ணிய பலன்களை பகவான் வாரி வழங்குவார் என புராணங்கள் கூறுகின்றன.பக்த கோடிகள் அனைவரும் இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணியில் தங்களை இணைத்து கொண்டு, தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஸ்ரீராமபிரானின் திருவருளுக்குப் பாத்தியம் ஆகும்படி  திருப்பணிக்குழு வேண்டிக்கொள்கிறது. நன்கொடை வழங்கும் பக்தர்களின் பெயர், நட்சத்திரத்தை கும்பாபிஷேகத்தின் போது அர்ச்சனை செய்து, பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்கொடை அனுப்ப தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

டி. கண்ணன், செயலாளர்,என். சங்கர நாராயணன், பொருளாளர்,ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் திருப்பணிக்குழு,விளாச்சேரி,மதுரை-625006மொபைல்: 97888 54854

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar