பதிவு செய்த நாள்
16
ஜூலை
2014
12:07
பாபநாசம்: பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியில் மைதின் நினைவு மருத்துவமனை வளாகத்தில், பாபநாசம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, பாபநாசம் எம்.எல்.ஏ., துரைக்கண்ணு தலைமையில் நடந்தது. கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் அழகு சின்னையன், ஒன்றியக்குழுத் தலைவர் கோபிநாதன், பேருராட்சி தலைவர் கருணாநிதி, மாவட்ட கவுன்சிலர்கள் மகேந்திரன், பன்னீர்செல்வம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலீல் வரவேற்று பேசினார். தஞ்சை எம்.எல்.ஏ., ரெங்கசாமி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் சேக்தாவூது, ஒன்றிய கவுன்சிலர்கள் முகம்மது காசிம், குர்ஷித், ஜாபர் அலி, சித்திக், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குமார், கண்øண், முத்து, ராமராஜன், ராஜேந்திரன், ராஜகோபால், முருகதாஸ், செல்வராஜ், ஜாகீர்உசேன், செந்தல்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.