Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஆடி தேங்காய் சுடும் பண்டிகை கோலாகலம்! ஆடி தேங்காய் சுடும் பண்டிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாட்டுக்குளம் கோயிலில் ஜூலை 21ல் மருந்து பொங்கல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2014
10:07

கோட்டயம்:கேரளா மாநிலம் கோட்டயம் அருகே கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில் ஆடி மாத ’மருந்து பிரசாதம்’ வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. ஜூலை 21 ல் ’மருந்து பொங்கலிடும்’ நிகழ்ச்சி நடக்கிறது. கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ., எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ., துாரத்தில் உள்ளது கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயில். இங்குள்ள ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகத்தின் கீழ், இக்கோயில் செயல்படுகிறது.நம்பூதிரி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் இக்கோயில், பாரம்பரிய பெருமை மிக்கது. நோய் தீர்க்கும் மருந்து, பிரசாதமாக வழங்கப்படுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. அம்மன் விக்ரகம் முன்னிலையில், மருத்துவ சாஸ்திர விதிமுறைகள் படி இந்த நோய்தீர்க்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த மருந்தை பெற்றுச்செல்லும் மக்கள் 41 நாட்கள் அருந்திவிரதம் இருந்தால் நோய்கள், பூர்வ ஜென்ம பாவம் அகலும் என்பது நம்பிக்கை.ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று துவங்கி, ஆக.,16 வரை தினமும் காலை 6 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 7:30 வரையும் நடக்கும். நேற்று உதயஅஸ்தமன பூஜை உட்பட 16 பூஜைகள் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்வான, ’மருந்து பொங்கலிடும் நிகழ்ச்சி’ ஜூலை 21 காலை 9 மணிக்கு நடக்கிறது. பொங்கலிடுவதற்கான பொருட்கள் கோயிலில் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோயில் தலைவர் நாராயணன் நம்பூதிரி தலைமையில், நிர்வாகி ஹரி நம்பூதிரி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பொங்கல் முன்பதிவு, பூஜை விபரங்களுக்கு 094966 20092, 094961 34500 ல் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar