Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் நாளை ஐந்து ... சதுரகிரி மலையில் துவங்கியது ஆடி அமாவாசை திருவிழா! சதுரகிரி மலையில் துவங்கியது ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் 51 ஆண்டாக மூடிக்கிடந்த வாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2014
10:07

ராமேஸ்வரம்: பக்தர்கள் வசதிக்காக ஐம்பத்தி ஒரு ஆண்டுக்கு பின், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அம்மன் சன்னதி அருகில் மூடி கிடந்த வாசல் திறக்கப்பட்டது. 11ம் நூற்றாண்டில் உருவான, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 1959ம் ஆண்டு வரை, சேதுபதி மன்னர்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்களின் ’டிரஸ்ட்’ மூலம் நிர்வகிக்கப்பட்டது. பின், 1960ம் ஆண்டில், மாநில இந்து அறநிலைத்துறை கோயில் நிர்வாகத்தை தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது. அப்போது, கோயிலில் 2ம் பிரகாரத்தில் நிறுத்தி வைத்திருந்த கல்மண்டபம் அமைக்கும் பணி, 1963ம் ஆண்டில் மீண்டும் துவங்கியது. இதனால், பர்வதவர்த்தினி அம்மனை தரிசித்து தெற்குபுறத்தில் இருந்த வாசல் வழியாக வெளியேறி, 2ம் பிரகாரத்தை கடந்து வெளியில் செல்லும் பக்தர்களுக்கு, கற்களால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் எனக் கருதி, அப்போதைய, இந்து அற நிலைத்துறை நிர்வாகம் அம்மன் சன்னதி தெற்கு புற வாசல் கதவுகளை மூடியது. ஆன்மிக மரபு மீறல்: இதனால், சுவாமிக்கு அர்த்த ஜாம பூஜை முடிந்து, பல்லக்கில் சுவாமி எழுந்தருளி, 2ம் பிரகாரம் வழியாக, அம்மன் சன்னதி தெற்கு வாசலில் சுவாமி நுழைந்து, பள்ளி அறைக்கு செல்ல முடியாமல் போனது. பின், ஆன்மிக மரபுகளை மீறி, அம்மன் சன்னதி கொடி மரம் வழியாக, சுவாமி பள்ளியறைக்கு சென்றார். இதற்கு ஆன்மிக பெரியோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்து அறநிலைத்துறை கண்டு கொள்ளவில்லை.

Default Image
Next News

இதுகுறித்து, 2012ம் ஆண்டில் ராமேஸ்வரம் புரோகிதர் சிவராசன், இந்து அறநிலைத்துறை கமிஷனருக்கு புகார் செய்தார். இந்நிலையில், நேற்று கமிஷனர் உத்தரவுப்படி, 51 ஆண்டுகளாக மூடி கிடந்த அம்மன் சன்னதி அருகில் உள்ள தெற்கு நுழைவு வாசல் கதவுகள் திறந்து, கோயில் ஊழியர்கள் மராமத்து செய்தனர். நாளை முதல்(ஜூலை 26) அம்மன் சன்னதியில் தரிசிக்கும் பக்தர்கள், தெற்கு புற வாசல் வழியாக செல்லலாம் என, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar