Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர ... மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொள்ளிடத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் நடராஜர் சுவாமி தீர்த்தவாரி உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
12:07

சிதம்பரம்: ஆடி பெருக்கையொட்டி 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடராஜர் சுவாமி கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கிறது.சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி (சந்திரசேகர சுவாமி) ஆடிப் பெருக்கு அன்று புறப்பாடு செய்து கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று, நடராஜர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.ஆனால், இந்நிகழ்வு பல்வேறு காரணங்களால் கடந்த 30 ஆண்டுகளாக தடைபட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு பொதுதீட்சிதர்கள் சார்பில் வரும் 3ம் @ததி ஆடிப்பெருக்கு அன்று நடராஜர் சுவாமி புறப்பாடு செய்து தீர்த்தவாரி உற்சவம் கொள்ளிடம் ஆற்றில் நடக்கிறது.அன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்து, காலை 6:00 மணிக்கு அஸ்தரராஜருடன் நடராஜர் சுவாமி புறப்பாடாகி பக்தர்களுடன் சென்று, கொள்ளிடம் ஆற்றில் 10:30 மணிக்கு எழுந்தருளுகிறார்.பின்னர், நடராஜர் சுவாமி முன்னிலையில் அஸ்தரராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர் மகா தீபாராதனை நடந்து சுவாமி தீர்த்தவாரி நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 4:00 மணிக்கு புறப்பாடு செய்து கோவில் வந்தடைகிறார்.அதனால் கொள்ளிடக்கரையில் நீராழி மண்டபம் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சீரமைக்கும் பணி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar