Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவெண்ணெய்நல்லூரில் 2ம் தேதி ... நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலாகலமாக நடந்த கம்பம் நடும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
02:07

சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்றிரவு கம்பம் நடுதல் விழா கோலாகலமாக நடந்தது. சேலத்தில், எட்டுப்பட்டிக்கும், தலைமை காவல் தெய்வமாக அருள்பாலிக்கும், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஆடிப்பெருவிழா, கடந்த, 22ம் தேதி இரவு, 8 மணியளவில், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பூச்சாட்டுதலுக்கு, அடுத்து வரும், செவ்வாய்க்கிழமையான நேற்று, "கம்பம் நடுதல் விழா கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, பெரியமாரியம்மனுக்கு, பட்டு உடுத்தி, புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தார். இரவு, 7.30 மணியளவில், கோவில் பூசாரி அர்த்தனாரி தலைமையில், வேம்பால் ஆன ஆறு அடி உயர முப்புரி கம்பம் கொண்டு வரப்பட்டு, அம்மன் சன்னதியில் பூஜைகள் நடந்தது. அதன்பின், மதுரை வீரனுக்கு கற்பூர தீபாராதனை நடத்தி, முப்புரி கம்பத்துக்கு, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, வேப்பிலை, பூக்கள் சகிதமாக அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. அதையடுத்து, பக்தர்கள் புடைச்சூழ, பம்பை, மேளம் உள்ளிட்ட மங்கள இசை முழங்க, முப்புரி கம்பம், கோவில் உட்பிரகாரத்தில், மும்முறை வலம் வந்ததும், பலி பீடத்தின் முன், அம்மன் நேரெதிரே, சரியாக இரவு, 8.28 மணிக்கு, கம்பம் நடப்பட்டது. திரண்டிருந்த பக்தர்கள் மெய்சிலிர்க்க, அம்மனை வழிப்பட்டனர். முப்புரி கம்பத்தில், கண் திறப்பு நிகழ்ச்சி நடந்ததும், அம்மனுக்கு, "திரு மங்கள நாண் அணிவித்து, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. கம்பம் நடுதல் நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள், பொங்கலிட்டு, ஆடு, கோழி பலியிட்டு, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar