விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு திருநகர் குபேர மகாலட்சுமி கோவிலில் ஆடிப்பூரம் விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு தாயாருக்கு வளையல் காப்பு அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் தாயார் ஆண்டாள் அலங்காரத்தில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உள்புறப்பாடு நடந்தது. பின்னர், கண்ணாடி அறையில் ஊஞ்சல் சேவை நடந்தது.