தியாகதுருகம்: தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதலும், தினமும் சக்தி கரகம் வீதியுலாவும் நடந்தது. கோவிலில் மாரியம்மன் சரித்திர பாடல் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. கடந்த 29ம் தேதி பால்குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண உற்சவமும், கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 9ம் நாள் விழாவை முன்னிட்டு அலங்கரித்த அம்மனை தேரில் வைத்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதைத்தொடர்ந்து சாகை வார்த்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.