சின்னசேலம்: சின்னசேலம் ஆரிய வைசிய சங்கம் சார்பில் நாகசதுர்த்தி விழா நடந்தது. சின்னசேலம் வாகசவி பூங்காவில், 5 கிலோ மஞ்சள் பவுடரில் கவுரி அம்மனை உருவாக்கி நாகர்சாமியுடன் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். உடன் பிறந்த சகோதரர்கள் ஆயுள் பலன் நீடிக்க வேண்டி, இந்த பூஜை நடந்தது. நாகசதுர்த்தி கதைக்கூறி கணேஷ் சர்மா பூஜைகளை நடத்தினார். இதில், ஆர்ய வைசிய சங்கம், மகிலாவிபாக் சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.