பதிவு செய்த நாள்
01
ஆக
2014
11:08
சேலம்: சேலம், நாழிக்கல்பட்டி இச்சாதாரீ நாகதேவதை அம்மன் கோவிலில், நேற்று நாகசதுர்த்தி, கருடபஞ்சமியை முன்னிட்டு நடந்த சிறப்பு ஹோமம், பூஜையில், திரளாக பக்தர்கள் வழிபட்டனர். சேலம், நாழிக்கல்பட்டி இச்சாதாரீ நாகதேவதை அம்மன் கோவிலில், நேற்று நாகசதுர்த்தி, கருடபஞ்சமியை முன்னிட்டு, மதியம், அம்மனுக்கு பொங்கல் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது. மாலையில், இச்சாதாரீக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்யாக வசனம், பஞ்ச கவ்யம், யஜமான சங்கல்பம், கலச பூஜைகள், சகலதோஷ நிவர்த்தி, கணபதி, நவகிரஹ, அஷ்டலட்சுமி, சுதர்ஸன, மிருத்யுஞ்ச ஹோமங்கள், மங்கள பூர்ணாஹூதி செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது. இன்று காலை, பால் அபிஷேகத்தை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள், தோஷங்கள் நீங்க பரிகார ஹோமம் நடக்கிறது.