பதிவு செய்த நாள்
01
ஆக
2014
12:08
ஈரோடு: ஈரோடு, காரைவாய்க்கால், நாகர் கோவிலில் அன்னாபிஷேகம் இன்று (1ம் தேதி) நடக்கிறது. ஈரோடு காரைவாய்க்கால் நாகர் கோவிலில், நாக பஞ்சமி விழா, இன்று நடக்கிறது. உலக ஷேமத்துக்காகவும், பசி, பிணி நீங்கவும், நாகருக்கு அன்னாபிஷேகமும், அன்னபூரணிக்கு விளக்கு பூஜையும் நடக்கிறது.காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாஜனம், நாகர் ஸ்கஸ்ரநாம அர்ச்சனை, ஹோமம் நடக்கிறது. அதன் பின் பால் அபிஷேகம், அன்னாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலையில் வெள்ளி கவசம் அணிவித்தல், விளக்கு பூஜை நடக்கிறது. நாக பஞ்சமியான இன்று சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. நாக தோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், தார தோஷம் நீங்க நாக பஞ்சமியில் அர்ச்சனை செய்து வழிபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.