பதிவு செய்த நாள்
01
ஆக
2014
12:08
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில், மஹா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. செங்குணம் மஹா மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த, 17ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. கடந்த, 24ம்தேதி காப்புக்கட்டுதலும், 25ம் தேதியிலிருந்து அன்னம், புஷ்பம், சிம்மம், பூப்பல்லாக்கு, மயில் போன்ற வாகனங்களில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். 29ம்தேதி மாவிளக்கு பூஜை, பால்குடம் எடுத்தலும், 30ம்தேதி அக்னிசட்டி, அலகு குத்துதல், பூ மிதித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. திருத்தேரோட்ட விழா நேற்று நடந்தது. இதில், செங்குணம் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.