ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த திருவரங்குளத்தில் உள்ள அரங்குளலிங்கநாதர் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது.திருவரங்குளத்தில் உள்ள அரங்குளலிங்கநாதர் கோவில், சோழர் காலத்து சிவன் கோவில். இக்கோவில் தரை மட்டத்தைவிட, ஆழத்தில் ஆறரை ஏக்கர் நிலப்பரப்பில் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த வாரம் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, அம்பாள் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம், பெரியநாயகி அம்பாள் தேரோட்டம் நடந்தது.