சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா நடந்தது.மாரியம்மனுக்கு, அபிஷேகம்,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைக்கு, ஆராதனை நடந்தது. பல்வேறு வகையான சித்ரான்னங்கள் படையிலிடப்பட்டன. சுவாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் கண்ணாடி வளையல்கள் வழங்கப்பட்டன. பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாக குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கன்னிவாடி: ஆடிப்பூரத்தை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், கமலவள்ளி, ஆண்டாளுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.