பதிவு செய்த நாள்
01
ஆக
2014
04:08
ராமநாதபுரம் அருகே மஞ்சங்குளத்தில் ஸ்ரீமகா விஷ்ணு, ஸ்ரீமங்கள விநாயகர் ஆலயத்தின் 48ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு காலையில் ஆலயத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது.பின்னர் அருள்மிகு சடையாண்டி முனீஸ்வரர் கோயிலில் இருந்து பால்குடங்கள் மற்றும் தீர்த்த குடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனையும் நடந்தன.மாலையில் அருள்மிகு மகாவிஷ்ணுவுக்கும், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.குளத்தூர் ஸ்ரீனிவாசராகவன் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். இதனையடுத்து விவேகானந்தா கேந்திர குழுவினரால் நடத்தப்பட்ட 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.திருவிளக்கு பூஜையில் மஞ்சங்குளம், பாலபச்சேரி, செட்டியகோட்டை, பெருங்களூர், கிளியூர், பனையூர், மும்முடிச்சாத்தான், வண்டல் உள்பட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இரவு சுவாமி திருவீதியுலாவும், சத்திய அரிச்சந்திரா நாடகமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் ஆர்.கனகசபாபதி, ஆலய நிர்வாகிகள் ரவி.லெட்சுமணன்,கே.அம்பலவாணன் செய்திருந்தனர்.