Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ... கொட்டும் மழை நிறைபுத்தரி பூஜை : சபரிமலையில் திரண்ட பக்தர்கள்! கொட்டும் மழை நிறைபுத்தரி பூஜை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆடிப்பூர தேரோட்டம் !
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2014
04:08

மன்னார்குடி ராஜ கோபாலசாமி கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.ஆடிப்பூர விழாமுன்பொரு காலத்தில் மகாலட்சுமி பிருகு மகரிஷியின் மகளாக பார்கவி எனும் பெயருடையவராக வளர்ந்து, பெருமாள் மீது கொண்ட பற்றால் கடும் தவம் இருந்து ராஜகோபாலனை திருக்கல்யாணம் செய்த தலம் மன்னார்குடி என புராணம் கூறுகிறது.இங்குள்ள ராஜகோபால சாமி கோவிலில் மகாலட்சுமி செங்கமலத் தாயார் எனும் பெயரில் அருள்பாலித்து வருகிறார்.செங்கமலத்தாயார் விழா காலங்களில் கோவிலின் ராஜ கோபுரத்துக்கு வெளியே வீதி உலா செல்லும் வழக்கம் இல்லை. அதேபோல் அவருக்கு நடைபெறும் தேரோட்டமும் கோவில் மதில் சுவருக்குள்ளே பிரகாரத் திலேயே நடைபெறும். ஆதலால், செங்கமலத் தாயாரை பக்தர்கள் ‘‘படி தாண்டா பத்தினி’’ என்று அழைக்கிறார்கள்.இவருக்கு ஆடி மாதம் கொண்டாடப்படும் “பூர விழா” விசேஷம். விழாவில் வெளி மாவட்ட பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.தேரோட்டம்இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 22-ந் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக் கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக வடிவமைக் கப்பட்ட தேரில் செங்கமலத் தாயார் சிறப்பு அலங்காரத் துடன் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தார்.முன்னதாக காலை 7 மணி அளவில் பார்கவிஹேமாப் தநாயகி என்று பக்தர்களால் அழைக்கப்படும் செங்கமலத் தாயார், சன்ன தியில் இருந்து புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து மதியம் 2.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.தேரோட்டத்தில் அமைச்சர் காமராஜ் மனைவி லதாமகேஷ் வரிகாமராஜ், நகரசபை தலைவர் சுதாஅன்புச் செல்வன், மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு மனோகரன் மற்றும் நகரசபை உறுப்பினர் கள், மன்னார்குடி மற்றும் அதைச் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து, செங்கமலத்தாயாரை தரிசனம் செய்தனர்.நிலை நின்றதுதேர் தெற்கு, மேற்கு, வடக்கு பிரகாரங்கள் வழியாகச் சென்று கிழக்கு பிரகாரத்தில் உள்ள தேர் நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையரு மான சிவராம் குமார், செயல் அலுவலர் ஜெயராமன், கோவில் பணியாளர்கள், பட்டாச் சாரியார்கள் செய்து இருந்தனர்.நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. விழாவையொட்டி சுக்கிரவார அம்மனுக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான சாத்தையா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.நீடாமங்கலத்தில் தஞ்சையை ஆட்சி செய்த பிரதாபசிம்மரால் கட்டப்பட்டது சந்தானராமர் கோவில் ஆகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவில் குளத்தில் நீராடி சந்தானகோபால ஜெயபம் செய்து சீதா, லெட்சுமணன், ஹனுமன் சந்தானராமரை வழிபட்டால் புத்திர பாக்கிய பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம். வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு கோவிலில் தெப்ப உற்சவ மண்டபத்தில் சீதா, லெட்சுமணன், ஹனுமன் சந்தானராமருக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள், ஹோமங்கள் நடந்தன. மதியம் கோவில் பிரகாரத்தில் அன்னதானம் நடந்தது. அதை தொடர்ந்து இரவு ராமபிரான் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாகாட்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், நீடாமங்கலம் வட்ட வாணியர் நலச்சங்கத்தினர், சந்தானராமர் கோவில் கைங்கர்யசபையினர் செய்திருந்தனர்.நன்னிலம்நன்னிலம் அருகே உள்ள சேந்தமங்கலம் தட்சிணகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆடிப்பூர திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர் பழனிஆண்டவர் கோவிலில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டு தேரோடும் வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் கோவிலை சென்றடைந்தது. பின்னர் தட்சிணாகாளிக்கு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar