Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து ... அம்மன் கோவில் ஆடி திருவிழாக்களில் பக்தர்கள் பரவசம்! அம்மன் கோவில் ஆடி திருவிழாக்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை சுப்பிரமணியருக்கு 600 குடத்தில் பாலாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஆக
2014
10:08

சென்னிமலை: சென்னிமலை, மலை மீதுள்ள ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமிக்கு, 600 குடம் பாலபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. சென்னிமலையில் எழுந்தருளி உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான், ஸ்ரீசுப்பிரமணியர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.திருபுகழை தந்த அருணகிரி நாதருக்கு, படிகாசு நல்கியதும், புண்ணாக்கு சித்தர், செங்கந்துறை பூசாரி, வேட்டுவபாளையம் பூசாரி போன்ற முனிவர்களுக்கு, திருகோல காட்சி தந்ததும், கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறியதும், 1,320 படிகள் வழியாக, இரட்டை மாட்டு வண்டி மலையேறிய சிறப்புகள் கொண்ட, மலையாக, சென்னிமலை விளங்குகிறது. சென்னிமலை மலை மீதுள்ள
சுப்பிரமணியருக்கு, ஆண்டு தோறும், ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பாலபிஷேக பெருவிழா நடந்து வருகிறது. நேற்று, 47வது ஆண்டாக, 600 குடம் பாலபிஷேக விழா நடந்தது. காலை, 7.35 மணிக்கு, 600 திருப்பாற் குடங்கள், சென்னிமலை நகரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேள, தாளத்துடன், திருவீதி வலம் வந்து, மலை கோவிலை சென்றடைந்தது. காலை, 11.40 மணிக்கு, மலை மேல் சுப்பிரமணியருக்கு, பாலபிஷேகம் துவங்கி மதியம், 1.30 வரை நடந்தது. இரண்டு மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது. 2.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும், மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கைத்தறி
மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, துணை தலைவர் ஈஸ்வர்மூர்த்தி, செயலாளர் ராமலிங்கன், பொருளாளர் சாமிநாதன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar