Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் தங்க கேடயத்தில் ... திருமலை திருப்பதியில் பவித்ரோற்சவம்! திருமலை திருப்பதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் எரியும் நெருப்பில் 108 முறை இறங்கிய பெண்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
10:08

திருநெல்வேலி : சங்கரன்கோவில் அருகே மாவிலியூத்து அக்கினி மாலையம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் 108 முறை எரியும் நெருப்பில் இறங்கினர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது மாவிலியூத்து கிராமம். இங்குள்ள அக்கினிமாலையம்மன் கோயில் விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும் தீக்குண்டம் விழாவில் மரக்கட்டைகளை தீயிட்டு அதில் பெண்கள் ஏறிச்செல்லும் நிகழ்வு மெய்சிலிர்க்கச்செய்கிறது. வழக்கமான தீமிதி விழாக்களில் கட்டைகளை தீயிட்டு சாம்பலான கங்குகளில் மிதிப்பார்கள். ஆனால் மாவிலியூத்து கோவில் விழாவில் கட்டைகளை அடுக்கி, எரியும் தீச் ஜூவாலையில் இறங்குவார்கள். 1800ம் ஆண்டுகளில் பிரிட்டீஷார் ஆட்சியின் போது நடந்த போர் ஒன்றில் மாவிலியூத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பங்கேற்று இறந்தார். கணவன் இறந்ததால் அவரது மனைவி, கணவர் இறந்த துக்கம் தாளாமல் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துள்ளார். அந்த பெண்ணை பின்னர் அக்கினி மாலையம்மனாக கோயில் எழுப்பி வழிபடத்துவக்கினர். அந்த பெண் தெய்வத்தின் கொடை விழாவில் பெண்கள், தீக்குண்டம் மிதித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதற்காக சங்கரன்கோவிலையடுத்துள்ள வன்னிக்கோனேந்தல், குருக்கள்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார ஏழு கிராம மக்கள் 48 நாட்கள் விரதம் இருந்து விழாவில் பங்கேற்கின்றனர். தீயில் இறங்கும் பெண்கள் இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலும் தீக்குண்டத்தில் இறங்குகின்றனர். ஒவ்வொரு பெண்களுமே 108 தடவை தீயில் இறங்குகின்றனர். இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூடியிருந்தனர்.

Default Image
Next News

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar