Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு நளன்குளம் ... ஆவணி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்! ஆவணி அமாவாசை: ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை மாதரசி மாதா தேவாலய பெரிய சப்பரபவனி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
04:08

நாகப்பட்டினம்: நாகையில் 455 ஆண்டுகள் பழமையான மாதரசி மாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடந்த பெரிய சப்பர பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை,கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மாதரசி மாதா தேவாலயம். 455 ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் போத்துக்கீசியர்களால்  கட்டப்பட்டது. பின் நாகை டச்சுக்காரர்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டப் போது, தேவாலயத்தில் உள்ள மாதா சிலையை டச்சுக்காரர்கள் சேதப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் பொதுமக்கள் மாதா சிலையை பெட்டி ஒன்றில் வைத்து மூடியுள்ளனர். பெட்டி சிறியதாக இருந்ததால் மாதாவின் தலை மட்டும் பெட்டியின் வெளியில் இருந்துள்ளது.பெட்டியை மக்கள் புதர் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். மறுநாள் காலை பார்க்கும் போது மாதாவின் தலைப்பகுதி சாய்ந்த நிலையில் பெட்டியினுள் இருப்பதையும், பெட்டி மூடியிருந்ததையும் பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இன்றும் கோவிலில் தலை சாய்ந்த நிலையில் மாதரசி மாதா பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.பழமையான இக்கோவிலின் ஆண்டுத்திருவிழா கடந்த 14 ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் தேவாலயத்தில் திருப்பலி, செபமாலை,மறையுரை மற்றும் தேர்பவனி நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு, கூட்டு பாடல் திருப்பலிக்கு பின் பெரிய சப்பர பவனி நடந்தது. மறைமாவட்ட  பாதிரியார் செல்வம் செபஸ்தியான்,உதவி பாதிரியார் ஆண்டோ ஜேசுராஜ் பெரிய சப்பரத்தை புனிதம் செய்து, பவனியை துவக்கி வைத்தனர்.அலங்கரிக்கப்பட்ட  பெரிய சப்பரத்தில் மாதரசி மாதா முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பெரிய சப்பர பவனியிலும் தொடர்ந்து நடைபெற்ற வானவேடிக்கையிலும்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar