Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராசரர்! ஆளவந்தார்! ஆளவந்தார்!
முதல் பக்கம் » பிரபலங்கள்
புரூரவஸ்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 செப்
2014
05:09

நவக்கிரஹங்களில் ஒருவரான புதனின் புதல்வன் புரூரவஸ், நீதிநெறி தவறாது அரசாண்டவன். தேவலோக நடன மங்கை ஊர்வசியின் அழகில் சித்திரா வருணர்கள் மையல் கொண்டனர். அவர்கள் ஆசையை ஊர்வசி நிராகரிக்கவே, அவர்கள் சினம் கொண்டு சிலகாலம் மானிடனின் மனைவியாகக் கடவது என சபித்தனர். சாபம் பெற்ற ஊர்வசி புரூரவஸின் அழகிலும், குணத்திலும் மனதைப் பறிகொடுத்தாள். புரூரவஸும் ஊர்வசியின் சவுந்தர்யத்தில் மயங்கினான். பெண்ணே! நீ யார்? என்னை மணந்து கொள்வாயா? என வினவினான். நான் தேவலோக அப்சரஸ் ஊர்வசி. உங்களை மணக்க ஒப்புக்கொள்கிறேன். அதற்கு இரு நிபந்தனைகள் உண்டு. முதலாவது, நான் வளர்க்கும் இரு ஆட்டுக் குட்டிகளும் என் படுக்கை அறையில்தான் இருக்கும். அதில் ஒன்று காணாமல் போனால் கூட நான் உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன். முகம் கோணாமல் பராமரிக்கும் ஆட்களை அவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உமது கடமை.

தவிர, நெய்யைத் தவிர வேறு ஆகாரம் எதையும் சாப்பிடும்படி என்னை வற்புறுத்தக் கூடாது. அதோடு திகம்பரனாக வெளிச்சத்தில் உங்களை நான் பார்க்கக் கூடாது என்றாள் அவள். அனைத்துக்கும் சம்மதித்து அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் புரூரவஸ். ஊர்வசி கருவுற்றாள். அமர லோகத்தில் ஊர்வசி இல்லாமல் குழு நடனங்கள் சிறக்கவில்லை. ஊர்வசியின் ஆடுகளை இரவில் தம்பதிகள் சுகித்திருக்கையில் கவர்ந்து வந்து விடுவோம். நிர்வாணமாயிருக்கும் புரூரவஸால் தடுக்க இயலாது. மீறி விரட்டினால் மின்னலை வீசுவோம் என்று திட்டம் தீட்டினான் விசுவாவசு. சரி, மின்னலை நீ பாய்ச்சத் தயாராயிரு. நான் ஒரு ஆட்டுக் குட்டியைத் திருடிக் கொண்டு வருகிறேன் என்றான் ஊர்ணாயு. நிபந்தனை எப்படியும் உடைய வேண்டும். ஊர்வசி பார்வை படும் தூரத்தில் மின்னலைப் பாய்ச்சினால்தான் பலன் என்று எச்சரித்தான் சித்திரசேனன்.

திட்டமிட்டபடியே அன்றிரவு எல்லாம் நடந்தது. ஆட்டின் கதறல் கேட்டு புரூரவஸைத் தள்ளி விட்டாள் ஊர்வசி. கலைந்து கிடந்த உடையைத் தேடுவதற்குள் மின்னலை வீசினான் விசுவாவசு. அதே நேரம் இரண்டாவது குட்டியையும் சித்திரசேனன் தூக்கிச் செல்ல ஊர்வசி துக்கித்தாள். ஆத்திரத்தோடு வாளை உருவிக் கொண்டு போனான் புரூரவஸ். இதற்கிடையே சாபம் நீங்கியதால் தேவலோகத்துக்கு பறந்து சென்று விட்டாள் ஊர்வசி. குட்டிகளோடு அந்தப்புரம் வந்த புரூவரஸ், ஊர்வசியைத் தேடித் திரிந்தான். குரு க்ஷேத்திரத்திலுள்ள ஒரு தாமரைப் பொய்கையில் தோழிகளுடன் நீராடுவது கண்டு அவளை அழைத்தான். மகனைப் பெற்றெடுத்து உங்களிடம் கொடுத்து விட்டு ஒருநாள் உங்களைத் திருப்திப்படுத்துவேன். அதோடு என்னை விட்டுவிட வேண்டும். பங்குனி கடைசியில் வாருங்கள் என்றாள் ஊர்வசி. அதன்படி, ஆயுசு வைப் பெற்று புரூரவஸுவிடம் ஒப்படைத்தாள். அப்போது கந்தர்வர்கள், அரசனிடம் தங்களை ஏமாற்றிய தோஷம் நீங்க வரமொன்று கொடுக்க விரும்புகிறோம் என்று கூற, ஊர்வசியோடு வாழ வரம் தாருங்கள் என்று கோரினான். அவர்கள் வன்னிமரக் குச்சியொன்றை அளித்து இந்தக் கொம்பை மூன்றாக்கி, வேத மந்திரங்களை உச்சரித்து இஷ்டகாமிய ஹோமம் செய்ய, உங்கள் விருப்பம் நிறைவேறும் எனக் கூறிச் சென்றனர். வேதவிதிப்படி ஹோமம் செய்து கந்தர்வ லோகம் சென்று ஊர்வசியோடு சுகித்திருந்தான் புரூரவஸ். முயன்றால்

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar