Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதூர் பெருமாள் கோவிலில் தங்க கருட ... கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா! கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களில் நவராத்திரி விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 அக்
2014
11:10

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் நவராத்திரி விழாவில், ஒவ்வொரு நாளும் ஒரு திருக்கோலம், அலங்காரத்தில் பெருமாள், அம்பாள் காட்சியளித்து வருகின்றனர். நவராத்திரி விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில் காமாட்சி அம்மன், தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மற்றும் கொலு மண்டபத்தில் இசை கச்சேரி நடந்து வருகிறது. கொலு மண்டபத்தில் பல வகையான திருகோலத்தை குறிக்கும் சுவாமி, அம்பாள் திருகல்யாண நிகழ்ச்சி போன்ற காட்சிகளுடன் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதே போல், அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் துவங்கிய நவராத்திரி விழாவில், முதல் நாள் பரமபத நாதர், கஜேந்திர வரதர், வெண்ணெய் தாழி கிருஷ்ணர், முரளி கிருஷ்ணர், ஆகிய திருகோலத்தில் கண்ணாடி அறையில் அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில், தினமும் இரவு ஒரு திருகோலத்தில் காட்சியளிக்ககிறார். முதல் நாள் விநாயகர், பொட்டு அம்மன், பனிலிங்க மூர்த்தி, ஆண்டாள், சமயபுரம், படவேட்டடம், ஆறாவது நாளாக பச்சையம்மன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். காஞ்சிபுரம் அய்யப்பன் நகரில் உள்ள, படவேட்டம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில், தினமும் ஒரு திருக்கோலத்தில் காட்சியளித்து வருகிறார். முதல் நாள் சந்தன மாரி, தீப்பாஞ்சியம்மன், பொன்னியம்மன், புற்று மாரியம்மன், திரிசூல நாயகி, பிள்ளை களை காத்தருளும் பேரரசி ஆகிய திருகோலத்தில் காட்சியளித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar